நான் பார்த்து ரசித்த.....

Wednesday, October 11, 2006

அம்மா....



survey done by British coucil,

Mother is the most beautiful word in the English language, according to a survey of over 40,000 overseas voters and learners of English at our teaching centres. The survey was conducted to coincide with our 70th anniversary celebrations.

We asked over 7,000 learners in 46 countries what they considered to be the most beautiful words in the English language. In addition an online poll was run via our websites in all non-English speaking countries.

The online poll was constructed and the results analysed using Confirmit, the world’s Number one online survey and reporting software www.confirmit.com. Over 35,000 people voted.

According to the survey results, the top ten most beautiful words in the English language are as follows:

Mother
Passion
Smile
Love
Eternity
Fantastic
Destiny
Freedom
Liberty
Tranquillity

ஆங்கிலத்தில் மட்டும் அல்ல உலகில் எந்த மொழியாக இருந்தாலும், மிக அழகான வார்த்தை என்றால் அது "அம்மா"வாகத்த்தான் இருக்கமுடியும்.

அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை..

அம்மா என் அம்மா..
அன்பாய் அரவணைத்து..
ஆசை முத்தம் தந்து..
ஆராரிரோ பாடல் பாடி
என்னைத் தூங்க வைப்பாள்
என் அம்மா..!
காலையில் நான்
தூக்கத்தில் இருக்க
என் பக்கத்தில் வந்து
என் தலையை வருடியபடி
என் நெற்றியில் முத்தமிட்டு
காலை வணக்கம் சொல்லி
சிரிப்புடன் அரவணைப்பாள்
என் அம்மா!

படிப்பும் சொல்லித்தந்து
பாடல்களையும் படித்துக் காட்டி
தமிழ்ப் பண்பாடுகளையும்
சொல்லித் தந்து
நன்றாகப் படிக்கச் சொல்லி
உற்சாகமும் தருவாள்
என் அம்மா!

நான் கோபத்தில்
சாப்பிடாமல் இருந்தால்
என்னிடம் ஏதோ சொல்லி
என்னைச் சமாதானப் படுத்தி
எனக்குச் சாப்பாடும்
ஊட்டி விடுவாள்
என் அம்மா!

எனக்கு ஒரு சின்ன
காயமென்றாலும்
துடிக்கும் இதயத்துடன்
படபடர்த்த பார்வையுடன்
என் காயத்துக்கு
மருந்து போடுவாள்
என் அம்மா!

என் அம்மா!
என் அன்புத்
தெய்வம் நீதானம்மா...!

கவிதை - நன்றி நிலாச்சாரல்