நான் பார்த்து ரசித்த.....

Monday, September 25, 2006

கமல்ஹாசன்....


கமல்ஹாசன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவருடைய நடிப்புதான். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் மற்றும் நேர்த்தி (perfection) பற்றி எழுதவுள்ளேன்.

அவர் தமிழ் பேசும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது, என்க்கு தெரிந்து இன்றைய திரைவுலகில் தமிழை இவவளவு அழகாக யாரும் உச்சரிப்பதில்லை. ex. அன்பே சிவம், குருதிப்புனல் படஙகளில் climax காட்சிகளில் வரும் வசனங்களை கேட்கும் போது மெய்சிலிர்க்கவைத்துவிடுவார்.

ஒரு தமிழ் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கோவைக்கு சில நாட்களுக்கு முன் வந்திருந்தார். உங்க ஊர் எழுத்தாளரை உங்களுக்கு அறிமுக்படுத்த சென்னையிலிரிந்து நான் வரவேண்டியிருக்கு என்று கடிநுதுகொண்டார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தமிழ் மீது வைத்துள்ள பற்றால் தனது busy schedule-லிலும் கோவை வந்து சென்றிருக்கிறார். இப்படி தமிழை நேசிக்கும், விரும்பும் ஒருவரை தமிழுக்கு எதிரானவர் என்று சித்தரித்து சீண்டிபார்க்கிறார்கள் இன்றையஅரசியல்வாதிகள். எது எப்படியோ, உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும்.

சமீபத்தில் ஒரு விழாவில், கலைஞரின் எழுத்துக்களில், வைரமுத்துவின் வரிகளில், சிவாஜியின் வசனங்களில் தமிழ் கற்றதாக கமல் சொன்னர்ர். அதேபோல் என்னை, தமிழை அதிகம் நேசிககவைத்தவர் கமல்ஹாசன்.

cu in the nxt post with part-2 of thalaivar's....