நான் பார்த்து ரசித்த.....

Wednesday, August 23, 2006

காரமடை அரங்கநாதர்...


முதல் பதிவாக காரமடை அரங்கநாதரின் சிறப்புக்களை பற்றி எழுதவுள்ளேன். கோவை மாவட்டத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு காரைவனம் என்னும் வனப்பகுதியில் அரங்கநாதர் சுயம்புவாக எலுந்தருளி காட்சியலித்தார் என்பது இத்திருத்தலதின் சிறப்பம்சமாகும். காரைவனம் என்பது நாளடைவில் காரமடையாக மாரியது. கோவையை ஆண்ட திருமலை நாய்க்கர் இத்திருத்தலத்தை கட்டினார் என்று வரலாறு கூறுகிரது. ஸ்ரீ ராமானுஜர் இத்திருதலத்திற்கு வந்து சென்றார் என்பது மேலும் சிறப்பம்சமாகும்.

வீட்டில் இருந்து 2கீமீ என்பதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இக்கோயிலுக்கு அம்மாவுடன் நடந்து செல்வது வழக்கமாக கொண்டிருந்தேன். பின்பு நண்பர்களுடன் செல்வதும் பிற பள்ளி நண்பர்களை சந்திக்கும் இடமாக மாரியது. இக்கோயிலுக்கு சென்றால் கிடைக்கும் அமைதியும் மனநிறைவும் வேறெங்கும் கிடைப்பதில்லை. சட்றென்ட்ரு மஹாநதி பாடலில் வரும் "வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்களேதடி" நினைவுக்கு வருகிறது. வாரந்தோரும் சனிக்கழமை இக்கோயிலுக்கு செல்வது வழ்க்கம், பொலப்ப தேடி பெங்கலூர் வந்ததால் இப்பெல்லாம் மாதம் ஒருமுறை தான் செல்கிறேன்.


மாசி மாதத்தில் வரும் திருத்தேர் மற்றும் வைகுண்ட ஏகாதேசி ஆகிய திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடபடும். இத்திருவிழாக்களின் போது காரமடையே வண்ண் தோரநன்கலால் அலன்கரிக்கப்பட்டு ஒரு வாரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இதைபற்றி விரிவாக வரும் பதிவுகளில் எழுதவிருக்கிறேன், இக்கோயிலை பற்றி மேலும் தெரிந்துகொல்ல linkஐ click செய்யவும் http://www.karaiarangar.com/indext.htm.

நான் தமிழில் தற்குரி என்பதால் எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.

Sunday, August 20, 2006

hello

romba naal aasai ethavathu eluthanumnu, ahayal indru mudhal aarumbum.....