நான் பார்த்து ரசித்த.....

Sunday, December 31, 2006

கமல்ஹாசன்-2....



கமல்ஹாசனுக்கு மறுபெயர் Mr.Perfect என்றே சொல்லலாம். ஏனென்றால் எதை செய்தாலும் அவ்வளவு நேர்த்தியாகவும் கவனமாகவும் செய்வார். அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரதுக்குகாக நடை, உடை, பாவனை மட்டும்மில்லாமல் பலபடி மேலேபோய் நாட்டியம்,பாட்டு,மொழி(slang) என்று எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டுவார் அதுதான் அவருடைய speciality.
ஒரு சிறு விசயமாக இருந்தாலும் அது சிறப்பாக வரவேண்டும் என்று நினைப்பவர், இந்தியன் climax காட்சியில் 60வயது கிழவன் எப்படி நடப்பானோ அதே போன்று தன் நடையை மாற்றி வித்யாசபடுத்திக்காட்டுவார்.

ஹேராம் படம் வெளியாவதற்கு முன்பு தினகரனில் அப்படத்தை பற்றி ஒரு சிறப்புமலர் வந்திருந்தது.அப்படத்தில் 10-15 வினாடிகளே வரும் ஒரு கட்சிக்காக முதலாம் உலகப்போரில் பயன்படுத்திய விமானத்தை France நாட்டிலிருந்து வரவழைத்தாக அப்புத்தகத்தில் படித்தேன்.
இப்படி உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

He is a man of par excellence, technical sounds great and today there is no one near to him in the cine industry. Thats why he is called as "sakalakala vallavan","uinversal hero" etc...

Wednesday, October 11, 2006

அம்மா....



survey done by British coucil,

Mother is the most beautiful word in the English language, according to a survey of over 40,000 overseas voters and learners of English at our teaching centres. The survey was conducted to coincide with our 70th anniversary celebrations.

We asked over 7,000 learners in 46 countries what they considered to be the most beautiful words in the English language. In addition an online poll was run via our websites in all non-English speaking countries.

The online poll was constructed and the results analysed using Confirmit, the world’s Number one online survey and reporting software www.confirmit.com. Over 35,000 people voted.

According to the survey results, the top ten most beautiful words in the English language are as follows:

Mother
Passion
Smile
Love
Eternity
Fantastic
Destiny
Freedom
Liberty
Tranquillity

ஆங்கிலத்தில் மட்டும் அல்ல உலகில் எந்த மொழியாக இருந்தாலும், மிக அழகான வார்த்தை என்றால் அது "அம்மா"வாகத்த்தான் இருக்கமுடியும்.

அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை..

அம்மா என் அம்மா..
அன்பாய் அரவணைத்து..
ஆசை முத்தம் தந்து..
ஆராரிரோ பாடல் பாடி
என்னைத் தூங்க வைப்பாள்
என் அம்மா..!
காலையில் நான்
தூக்கத்தில் இருக்க
என் பக்கத்தில் வந்து
என் தலையை வருடியபடி
என் நெற்றியில் முத்தமிட்டு
காலை வணக்கம் சொல்லி
சிரிப்புடன் அரவணைப்பாள்
என் அம்மா!

படிப்பும் சொல்லித்தந்து
பாடல்களையும் படித்துக் காட்டி
தமிழ்ப் பண்பாடுகளையும்
சொல்லித் தந்து
நன்றாகப் படிக்கச் சொல்லி
உற்சாகமும் தருவாள்
என் அம்மா!

நான் கோபத்தில்
சாப்பிடாமல் இருந்தால்
என்னிடம் ஏதோ சொல்லி
என்னைச் சமாதானப் படுத்தி
எனக்குச் சாப்பாடும்
ஊட்டி விடுவாள்
என் அம்மா!

எனக்கு ஒரு சின்ன
காயமென்றாலும்
துடிக்கும் இதயத்துடன்
படபடர்த்த பார்வையுடன்
என் காயத்துக்கு
மருந்து போடுவாள்
என் அம்மா!

என் அம்மா!
என் அன்புத்
தெய்வம் நீதானம்மா...!

கவிதை - நன்றி நிலாச்சாரல்

Monday, September 25, 2006

கமல்ஹாசன்....


கமல்ஹாசன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவருடைய நடிப்புதான். அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் மற்றும் நேர்த்தி (perfection) பற்றி எழுதவுள்ளேன்.

அவர் தமிழ் பேசும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது, என்க்கு தெரிந்து இன்றைய திரைவுலகில் தமிழை இவவளவு அழகாக யாரும் உச்சரிப்பதில்லை. ex. அன்பே சிவம், குருதிப்புனல் படஙகளில் climax காட்சிகளில் வரும் வசனங்களை கேட்கும் போது மெய்சிலிர்க்கவைத்துவிடுவார்.

ஒரு தமிழ் புத்தக வெளியீட்டு விழாவுக்கு கோவைக்கு சில நாட்களுக்கு முன் வந்திருந்தார். உங்க ஊர் எழுத்தாளரை உங்களுக்கு அறிமுக்படுத்த சென்னையிலிரிந்து நான் வரவேண்டியிருக்கு என்று கடிநுதுகொண்டார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தமிழ் மீது வைத்துள்ள பற்றால் தனது busy schedule-லிலும் கோவை வந்து சென்றிருக்கிறார். இப்படி தமிழை நேசிக்கும், விரும்பும் ஒருவரை தமிழுக்கு எதிரானவர் என்று சித்தரித்து சீண்டிபார்க்கிறார்கள் இன்றையஅரசியல்வாதிகள். எது எப்படியோ, உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும்.

சமீபத்தில் ஒரு விழாவில், கலைஞரின் எழுத்துக்களில், வைரமுத்துவின் வரிகளில், சிவாஜியின் வசனங்களில் தமிழ் கற்றதாக கமல் சொன்னர்ர். அதேபோல் என்னை, தமிழை அதிகம் நேசிககவைத்தவர் கமல்ஹாசன்.

cu in the nxt post with part-2 of thalaivar's....

Wednesday, August 23, 2006

காரமடை அரங்கநாதர்...


முதல் பதிவாக காரமடை அரங்கநாதரின் சிறப்புக்களை பற்றி எழுதவுள்ளேன். கோவை மாவட்டத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு காரைவனம் என்னும் வனப்பகுதியில் அரங்கநாதர் சுயம்புவாக எலுந்தருளி காட்சியலித்தார் என்பது இத்திருத்தலதின் சிறப்பம்சமாகும். காரைவனம் என்பது நாளடைவில் காரமடையாக மாரியது. கோவையை ஆண்ட திருமலை நாய்க்கர் இத்திருத்தலத்தை கட்டினார் என்று வரலாறு கூறுகிரது. ஸ்ரீ ராமானுஜர் இத்திருதலத்திற்கு வந்து சென்றார் என்பது மேலும் சிறப்பம்சமாகும்.

வீட்டில் இருந்து 2கீமீ என்பதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இக்கோயிலுக்கு அம்மாவுடன் நடந்து செல்வது வழக்கமாக கொண்டிருந்தேன். பின்பு நண்பர்களுடன் செல்வதும் பிற பள்ளி நண்பர்களை சந்திக்கும் இடமாக மாரியது. இக்கோயிலுக்கு சென்றால் கிடைக்கும் அமைதியும் மனநிறைவும் வேறெங்கும் கிடைப்பதில்லை. சட்றென்ட்ரு மஹாநதி பாடலில் வரும் "வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்களேதடி" நினைவுக்கு வருகிறது. வாரந்தோரும் சனிக்கழமை இக்கோயிலுக்கு செல்வது வழ்க்கம், பொலப்ப தேடி பெங்கலூர் வந்ததால் இப்பெல்லாம் மாதம் ஒருமுறை தான் செல்கிறேன்.


மாசி மாதத்தில் வரும் திருத்தேர் மற்றும் வைகுண்ட ஏகாதேசி ஆகிய திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடபடும். இத்திருவிழாக்களின் போது காரமடையே வண்ண் தோரநன்கலால் அலன்கரிக்கப்பட்டு ஒரு வாரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இதைபற்றி விரிவாக வரும் பதிவுகளில் எழுதவிருக்கிறேன், இக்கோயிலை பற்றி மேலும் தெரிந்துகொல்ல linkஐ click செய்யவும் http://www.karaiarangar.com/indext.htm.

நான் தமிழில் தற்குரி என்பதால் எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.

Sunday, August 20, 2006

hello

romba naal aasai ethavathu eluthanumnu, ahayal indru mudhal aarumbum.....